• Sep 20 2024

சோப் விளம்பரத்தில் நடித்த திரிஷா.. கூடவே கம்பெனி கொடுத்த எஸ்கே..!! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப்நடிகையாக திகழ்பவர் தான் நடிகை திரிஷா. இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ திரைப்படத்திலும் இளமை மாறாமல் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இன்றி இருந்த திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன், 96 போன்ற படங்கள் மீண்டும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. 

அண்மையில் விஜயுடன் நடித்த லியோ திரைப்படத்திற்கு பிறகு தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, ராம் பார்ட் 1, விஸ்வம்பரா, தக் லைஃப் போன்ற படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் திரிஷா. மேலும் கோட் படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளாராம்.


இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன்பு சோப் விளம்பரத்தில் நடித்துள்ளார்  திரிஷா. அவருடன் சிவகார்த்திகேயனும் நடித்துள்ள வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.


சிவகார்த்திகேயன் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement