தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபலர் தான் த்ரிஷா. இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தில் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
இவர் தற்போது விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.மேலும் அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கின்றார். இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.
இது தவர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி சேரும் KH234 படத்தில் த்ரிஷா தான் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.அதற்காக த்ரிஷாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது நயன்தாரா ஜவான் படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக் கானின் ஜவான் படத்தில் நடிக்க நயன்தாரா 11 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. அதை தற்போது த்ரிஷா மிஞ்சி இருக்கிறார். அத்தோடு தளபதி 68 படத்திலும் த்ரிஷா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!