• Sep 20 2024

இணையத்தில் வைரலாகும் திரிஷாவின் தி ரோட்' திரைப்பட டிரைலர்

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய பிரபல நடிகை திரிஷா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தற்போது இவர் 
இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப்,  ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இத் திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 


மதுரை அருகே மர்மமான இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை அடுத்து அந்த வழக்கை விசாரணை செய்து வரும் த்ரிஷாவுக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இதனை அடுத்து அந்த விபத்து செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது என்பதும் அதை ஏற்படுத்தியது யார் என்பதையும் அவர் கண்டுபிடிக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சனைகள்  தான் டிரைலர் முலம் வெளிவந்திருக்கின்றது .இது ரசிகர்கள் மத்தியில் தற்போதுவைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement