• Sep 21 2024

இரகசியத் திருமணமா..? வெளியான த்ரிஷாவின் கல்யாண வீடியோ... குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள த்ரிஷா இப்போது நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் மூலம் உயர்ந்துள்ள இவருடைய மார்க்கெட் தற்போது லியோவால் எகிறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


படங்களில் பிசியாக இருந்து வந்தாலும் த்ரிஷா தன்னுடைய தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்தவொரு அக்கறையும் கொள்வதாக தெரியவில்லை. மேலும் வயதாகியும் இன்னும் த்ரிஷாவிற்கு திருமணம் செய்து வைக்கவில்லையே ?அவரை வைத்து அவருடைய அம்மா பணம் சம்பாதிக்கிறார் என்று பலரும் விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர்.

இருப்பினும் பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை த்ரிஷாவிற்கு திருமணம் பேசி நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த நிச்சயதார்த்தம் பாதியிலேயே நின்று போனது நம் அனைவருக்கும் தெரியும். இதன் பின்னர் தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்சிப்பில் இருந்ததாகவும் ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது .


இவ்வாறாக எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும் 40வயதான த்ரிஷாவிற்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இருப்பது போல் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது த்ரிஷாவின் திருமண வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ரகசியமாக திடீர்த் திருமணம் செய்து கொண்டுள்ளீர்களா எனக் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

ஆனால் உண்மையில் அது த்ரிஷாவின் திருமண வீடியோ அல்ல, நகைக் கடை விளம்பரம் ஒன்றிற்காக த்ரிஷா திருமணம் நடப்பது போல் நடித்த வீடியோ தான் அது. இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement