• Nov 19 2024

மனைவியுடன் பிரச்சனை- நடிகையுடன் ரகசிய காதலா..? பிரபல நடிகர் பற்றி தீயாய் பரவும் தகவல்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழ்பவர் தான் நடிகர் பிரதீப்.இவருக்கும்  சனாயா சாகருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணமான வேகத்தில் அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.அத்தோடு  விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள்.


விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நேரத்தில் பிரதீக் பாபரின் வாழ்க்கையில் மீண்டும் காதல் வந்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. நடிகை ப்ரியா பானர்ஜியை தான் பிரதீக் காதலிக்கிறாராம்.



சின்னத்திரையில் இருக்கும் பொதுவான நண்பர்கள் மூலம் ப்ரியாவை சந்தித்தாராம் பிரதீக். அத்தோடு சுமார் ஓராண்டு காலமாக பழக்கமாம். ஜோடியாக வெளியே செல்வது, ஒன்றாக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதுமாக இருக்கிறார்களாம். ஆனால் புகைப்படக் கலைஞர்கள் உள்பட யார் கன்னிலும் படாமல் எச்சரிக்கையாக உள்ளாராம்.



நான் ப்ரியா பானர்ஜியை காதலிக்கிறேன் என்று குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டாராம் பிரதீக்.மேலும்  அவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் காதலை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

சனாயா சாகரை திருமணம் செய்து கொள்ளுமுன்பு நடிகை ஏமி ஜாக்சனை காதலித்தார் பிரதீக் பாபர். அத்தோடு பிரதீக்கின் பெயரை தன் கையில் பச்சை குத்தினார் ஏமி. ஆனால் அந்த காதல் முறிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement