• Sep 20 2024

TTF வாசன் சிறையில் அடைப்பு... போலீசார் எடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் தான் யூடியூப் பிரபலம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். இவரைப் போல பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.


இவருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக  டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார். 


இதனையடுத்து நேற்று முன்தினம் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முற்பட்டதால், பைக் அவரது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் குட்டிக்கரணம் அடித்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்து குறித்து வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்றைய தினம் அவரைக் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் இவரை15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து அக்டோபர் 3-ஆம் தேதி வரை வாசன் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு இவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement