மலையாளத்தில் முன்னனி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தற்போது இயக்குனாகவும் வலம் வருகின்றார்.இவர் செக்கண்டு சோவ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் மலையத்தில் சூப்பர் கிட்டாக வலம் வந்த மம்முட்டியின் மகன் என்பதும் நாம் அறிந்த ஒன்றாகும். இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களையும் தன் வசம் கொண்டுள்ளார்.
எனினும் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது, அப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் வெற்றியடைய தவறியது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் தற்போது துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அத்தோடு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் வெளியாகும் இந்த படம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!