சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று வானதைப்போல.இந்த சீரியல் அண்ணன் தங்கை பாசத்தை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட தொடர்.
இந்த தொடரில் துளசி - சின்ராசு இரண்டு பேருமே முதன்மை கதாப்பாத்திரம். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த தொடரில் துளசி கேரக்டரில் ஆரம்பத்தில் நடித்தவர் ஸ்வேதா கால்கே.
அவர் திடீரென சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரை தொடர்ந்து சின்ராசு ரோலில் நடித்த தமன் வெளியேறினார். அதற்கு பிறகு தற்போது வேறு நடிகர்கள் அந்த ரோல்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஸ்வேதா பற்றி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அவர் தற்போது கலைஞர் டிவியில் கண்ணெதிரே தோன்றினாள் என்ற புது சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கேஜிஎப் பட புகழ் நடிகை மாளவிகா அவினாஷ் இந்த தொடரில் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!