தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் அசோக் செல்வன்.இவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூது கவ்வும்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.இதை தொடர்ந்து 'பீட்சா 2 வில்லா', தெகிடி, சவாலே சமாளி, 144, மன்மத லீலை, ஹாஸ்டல், கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், போன்ற பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக இவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.அதன் பின்னர் இவர் நடித்த போர் தொழில் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இப்போது இயக்குநர் பா ரஞ்சித் தயாரிக்கும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர சபா நாயகன் என்கிற படமும் இவரின் கைவசம் உள்ளது.இப்படி பிஸியாக நடித்து வரும் நிலையில் இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய அருண் பாண்டியன் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் செப்டம்பர் 13 ஆம் தேதி, நெல்லையில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணமா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Listen News!