• Nov 10 2024

வில்லன்களை ஜோக்கராக மாற்றுங்கள்: கங்கனாவின் அதிரடிப் பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த விடயம் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். அதுமட்டுமல்லாது தேசிய விருது பெற்ற பாலிவுட் திரையுலக நடிகையும் கூட. இவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று தான் கூறலாம்.

சமீபகாலமாகவே பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகளவில் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் கங்கனா ரனாவத். இந்த நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இவர் நடித்திருந்த முன்னாள் தலைவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான ‘தலைவி’ என்ற இந்தப்படம் இவரின் திறமையை உலகிற்கே எடுத்துக் காட்டியது.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது ‘எமெர்ஜென்சி’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் இவர் பிரதமர் இந்திரா காந்தியை போல் நடித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் நடிகை கங்கனா ரனவத் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவு செய்து வருவார் என்பதும் அந்த பதிவுகள் மிகப்பெரிய அளவில் கண்டனத்தைம் ஆதரவையும் மாறி மாறி பெற்று வரும் என்பது குறிப்பிடத்தக்கது

சற்றுமுன் நடிகை கங்கனா ரணவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் வாழ்க்கையில் வில்லன்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை நீங்கள் ஜோக்கர்கள் ஆக மாற்றுங்கள் என்று பதிவு செய்துள்ளார்

அத்தோடு விமர்சனங்களை உங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் என்றும் பின்னர் விமர்சித்தவர்கள் முகத்தில் கரியைப் பூசி என்றும் தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement