• Sep 21 2024

விஜய்யின் வாரிசு: டிஜிட்டல் , சாட்டிலைட் உரிமை பெற்ற நிறுவனங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான விஜய் தற்பொழுது தனது 66 படத்தில் நடித்து வருகின்றார்.இவரின் இந்த படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் என்பன விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது.

தற்போது வரை இந்த போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் வாரிசு படம் 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.அடுத்த கட்ட ஷுட்டிங் எங்கு, எப்போது துவங்கப்படும் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆம், வாரிசு திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டி.வி கைப்பற்றி இருப்பதாகவும் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை அமேசான் பிரைம் வாங்கியிருப்பதாக தகவல் பரவி வருகின்றது.

மேலும் இந்த தகவல்கள் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement