• Nov 14 2024

ஒரே நாளில் இரு மரணங்கள்.. நண்பனின் பிரிவால் மீளாத் துயரில் தமிழக முதல்வர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கு இன்றைய நாள் வாழ்க்கையில் என்றுமே இல்லாத அளவிற்கு மிகவும் சோகமான நாளாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் முதலில் இன்று அதிகாலை அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி மரணமடைந்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணிநேரங்களிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லூரி தோழனும் பிரபல திரைப்பட இயக்குநரும், காமெடி நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார். இப்படி ஒரே நாளில் நெருங்கிய உறவினர் ஒருவரும், உயிருக்கு உயிரான நண்பன் ஒருவரும் உயிரிழந்தது முதல்வர் மு.க.ஸ்டாலினை பெரும் சோகத்திலும் பேரதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.


அதாவது முதல்வர் மு.க.ஸ்டாலினும், டிபி கஜேந்திரனும் கல்லூரி காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாவர். அந்தவகையில் இவர்கள் இருவரும் விவேகானந்தா கல்லூரியில் ஒன்றாக இணைந்து படித்துள்ளனர். அங்கு மலர்ந்த இவர்களது நட்பு, பல ஆண்டுகள் கடந்து இன்றுவரையும் தொடர்ந்து வந்தது.


மேலும் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் டி.பி.கஜேந்திரனை அடிக்கடி நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்தும் தீவிர அக்கறையுடன் விசாரித்து வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதாவது தூத்துக்குடியை சேர்ந்த டி.பி.கஜேந்திரன், சிறுவயதிலேயே சென்னையில் குடியேறி அங்கு குடும்பத்தினருடன் மிகவும் சந்தோசமாக வசித்து வந்தார். பின்னர் சினிமா மீதுள்ள தீவிர ஆர்வத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக விளங்கிய கே.பாலச்சந்தர், விசி, ராமநாராயணன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இணைந்து பணியாற்றினார். 


இதனைத் தொடர்ந்து பின்னர் சொந்தமாக படங்களை இயக்கும் திறமையை பெற்றார். இவர் இயக்கிய பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா போன்ற படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்திருக்கின்றன.

அதுமட்டுமல்லாது டி.பி.கஜேந்திரன் சென்னை சாலிகிராமத்தில் சொந்தமாக லாட்ஜ் ஒன்றையும் வாங்கி நடத்தி வருகிறார். அந்த லாட்ஜின் உடைய முதல் தளத்திற்கு தனது குருவான இயக்குநர் விசுவின் பெயரையும், இரண்டாம் தளத்திற்கு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் உடைய பெயரையும், மூன்றாவது தளத்திற்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா பெயரையும் சூட்டி திரைப் பிரபலங்களுக்கு தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தி இருந்தார். 


இந்நிலையில் தற்போது அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருப்பது தமிழ் திரையுலகினரை மட்டுமல்லாது முதல்வர் ஸ்டாலினையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Advertisement