• Sep 20 2024

மிரட்டல் லுக்கில் களமிறங்கும் அசோக் செல்வனின் படத்தில் இரண்டு கதாநாயகிகளா-வெளியானது சூப்பர் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் அசோக் செல்வன்.சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மன்மத லீலை படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து வெளியான ஹாஸ்டல் திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அசோக் செல்வன், கார்த்திக் இயக்கத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ மற்றும் பெயரிடாத சில படங்களில் நடித்து வருகிறாராம்.

மேலும் காதல் ரொமென்ஸ் மற்றும் காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த அசோக் செல்வன், தற்போது ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ‘வேழம்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை கே4 கிரிகேஷன் சார்பில் கேசவன் தயாரித்துள்ளாராம்.

எஸ்பிஐ சினிமா நிறுவனம் இப்படத்தை வெளியிட உள்ளது.மேலும் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடிகர் அஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அசோக் செல்வன் டெர்ரரான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement