தமிழ் சினிமாவில் வாரிச நடிகராக அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜெய்பீம். ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் OTT யில் வெளியாகினாலும் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றதோடு பல சாதனைகள் மற்றும் விருதுகளையும் வாங்கி வருகின்றது. இந்நிலையில் இந்த ஜெய்பீம் படத்தில் அதிக அளவில் ரசிக்கப்பட்ட மற்றும் பலராலும் விரும்பப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றால் ராஜாகண்ணு கதாபாத்திரம் தான்.
இப்போது, 12 TH தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2022 இல் இப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இந்த திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்றது மற்றும் நடிகர் மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதுகளை பெற்றதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தாழ்த்தப்பட்ட பழங்குடி சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் நாகரீகத்தின் மீது நீதியைப் பெற உதவும் ஒரு வழக்கறிஞரை மையமாகக் கொண்டது என்பதும் முக்கியமாகும்.
பிறசெய்திகள்:
- பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!
- பிரபல டிவி நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்? விரைவில் திருமணமா..!
- காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!
- காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்
- “நானே வருவேன்” திரைப்படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கின்றதா?- முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!