• Sep 20 2024

சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு கிடைத்த மேலும் இரண்டு விருதுகள்- ரசிகர்களிடமிருந்து குவியும் பாராட்டுக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிச நடிகராக அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜெய்பீம். ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

director Tamizh.

இப்படம் OTT யில் வெளியாகினாலும் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றதோடு பல சாதனைகள் மற்றும் விருதுகளையும் வாங்கி வருகின்றது. இந்நிலையில் இந்த ஜெய்பீம் படத்தில் அதிக அளவில் ரசிக்கப்பட்ட மற்றும் பலராலும் விரும்பப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றால் ராஜாகண்ணு கதாபாத்திரம் தான்.

இப்போது, ​​12 TH தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2022 இல் இப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இந்த திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்றது மற்றும் நடிகர் மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதுகளை பெற்றதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தாழ்த்தப்பட்ட பழங்குடி சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் நாகரீகத்தின் மீது நீதியைப் பெற உதவும் ஒரு வழக்கறிஞரை மையமாகக் கொண்டது என்பதும் முக்கியமாகும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement