• Sep 20 2024

தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான அடுத்தடுத்து இரண்டு அறிவிப்புகள்..யாரும் எதிர்பார்கலையே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ்.

இவருடைய முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக குவிய தொடங்கின. தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார். தன்னுடைய இயல்பான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இவர் நடிகராக மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ,திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல்துறை திறமை கொண்டவராக விளங்குகின்றார்.

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான The Gray Man திரைப்படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

அப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மிக பெரிய பொருட்செலவில் உருவாகும் அப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தற்போது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் முக்கிய பட அப்டேஸ் வெளியாகியுள்ளது. ஆம், வரும் 27 ஆம் தேதி அப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் 28 ஆம் தேதி டீசர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement