• Nov 14 2024

இரண்டு வாரங்கள் ஹனிமூன்-அதுவும் எங்கு தெரியுமா; மாஸ்டர் பிளான் போட்ட நயன்-விக்கி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டு காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு பின் கடந்த 9 ஆம் தேதி இருவரின் திருமணமும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

பாலிவுட் கோலிவுட் பிரபலங்கள் ஆசிர்வாதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு கோவில்களுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்.

மேலும் இதேபோல் விருந்துக்கும் சென்று வருகின்றனர். நயன்தாராவின் தாயார் திருமணத்திற்கு வராததால் தற்போது கேரளா சென்று விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் கொச்சி விமான நிலையத்திலேயே ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கொச்சியிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் விருந்து அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் அவரது பெற்றேரிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.

இதனை தொடர்ந்து அங்குள்ள கோவில்களுக்கு சென்று வருகின்றனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும். இந்நிலையில் இந்த விருந்து நிகழ்ச்சிகளையெல்லாம் முடித்துக் கொண்டு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்ல உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஹனிமூனுக்காக ஆள் இல்லாத தீவுகளை நயன்தாரா தேர்வு செய்துள்ளதாகவும், இரண்டு வாரங்கள் ஹனிமூன் கொண்டாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா திருமணம் முடிந்து ஹனிமூன் செல்லவில்லை மாறாக ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் என தகவல் கசிந்தது.

ஆனால் திருமணத்திற்கு பின்னர் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த நயன்தாராவிடம் ஹனிமூன் எங்கே போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஹனிமூன் போவோம் என்று மட்டும் பதில் அளித்தனர் விக்கியும் நயன்தாராவும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement