தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
அத்தோடு கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இவ்வாறுஇருக்கையில் , ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் இரண்டு பெண் தொகுப்பாளர்கள் அதிரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து கடும் சேட்டைகள் செய்கின்றனர்.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!