• Sep 20 2024

இசைஞானி இளையராஜாவுடன் இணையும் வைகைப்புயல் வடிவேலு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அன்னக்கிளி திரைப்படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவில் என்றி கொடுத்தார் இசையமைப்பாளர் இளையராஜா. 1000 மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.தமிழ் இசை மட்டுமன்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி துறைகளிலும் கொடி கட்டி பறந்தார் இசைஞானி .

இந்நிலையில்,இசைஞானி இளையராஜா சமீபத்தில் தனது 80வது பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினார். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியதன் விளைவாக இளையராஜா சென்னை மற்றும் கோவையில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இப்போது,இசைஞானி ஜூன் 26 இல் மதுரையில் இந்த ஆண்டு மூன்றாவது நேரடி இசையை நடத்த உள்ளார். செய்தி அறிக்கைகளின் படி பின்னணிப் பாடகர் மற்றும் இசைக் கலைஞர்கள் தவிர இந்த முறை நடிகர் வடிவேலு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் மதுரையில் நடக்கப்போகும் கச்சேரியில் பாடப் போவதாகவும் புரோமோ வீடியோ ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

அதில் நான் பிறந்த மதுரை மீனாட்சி பட்டணத்திற்கு எந்தன் இசைஞானி கச்சேரி நடத்த வருகிற இதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது கண்டிப்பாக நானும் அந்தக் கச்சேரிக்கு வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement