பரியேறும் பெருமாள், கர்ணன் என்ற இரண்டு பிளாஸ் பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் தான் மாரி செல்வராஜ். இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் மாமன்னன் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில் இப்படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும் என்றும், இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும் என்றார்.
நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தைத் தொடர்ந்து வடிவேலு மாமன்னன் படத்தில் அழுத்தமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஹீரோக்களுக்கு தந்தையாக வடிவேலு நடிக்காத நிலையில், மாமன்னன் படத்தில் முதன்முறையாக படத்தின் நாயகன் உதயநிதிக்கு தந்தையாக வடிவேலு நடித்துள்ளார்.
இதுவரை நகைச்சுவை நடிகராக நடித்து வந்த வடிவேலுவை பாசமிகு தந்தையாக புதிய பரிமாணத்தில் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.மாமன்னன் திரைப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், படத்தின் அப்டேட் குறித்த தகவலை புது போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில், ஒருபக்கம் கோட்ஷூட்டுடன் உதயநிதியும் மறுபக்கம் அரசியல்வாதி லுக்கில் ஒருவரும் நிற்கின்றனர். மேலும், வரும் 1ந் தேதி மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!