நடிகரும் தயாரிப்பாளருமாக சினிமாவை கலக்கி வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து 2 படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் தலைப்பிடாத ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த தலைப்பிடாத படத்திற்கு கழகத்தலைவன் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டான். இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின், அவரது நடிப்பில் பிரின்ஸ், அயலான் என படங்களில் விரைவில் வெளியாகவுள்ளன.
இந்த நிலையில், ஒரு பிரபல யூடியூப் சேனலில் சிவகார்த்திகேயன் அதிகப் பங்குகள் வைத்துள்ளதாகவும், இந்தச் சேனலுக்கு சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி கையெழுத்திட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இந்த யூடியூப் சேனலை நடிகரும் எம்.எல்.ஏவுமான உதய நிதி ஸ்டாலின் வாங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிற செய்திகள்
- வீட்டுக்கு வந்த கோபிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – பாக்கியாவா இது…? இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பணத்தை திருடி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சனா.. சிவகாமி எடுத்த முடிவு – இன்றைய எபிசோட் அப்டேட்
- அருண் விஜய் நடித்த யானை திரைப்படத்தின் வசூல் விபரம்..!
- “நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை…அவரிடம் ஏதோ ஒன்று இருக்கின்றது..” பிரபல நடிகை பகீர் பேட்டி..!
- அட அனிருத்திற்கு அக்கா இருக்கிறாங்களா..? அடேங்கப்பா..என்ன ஒரு அழகு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!