கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம் .இத் திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகும் இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகிய முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் கடந்த வாரம் வெளியான பத்தல பத்தல பாடல் செம ஹிட்டானது. கமல் எழுதி பாடியுள்ள அப்பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வசூல் சாதனைகளை படைக்குமென்று கருதப்படும் விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியுள்ளார் உதயநிதி. தற்சமயம் முக்கியமான படங்களின் உரிமையை வாங்கி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டு வருகின்றார் உதயநிதி.
ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட் என பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்கி வெளியிட்டு வரும் உதயநிதி அடுத்ததாக கமல் தயாரித்து நடித்திருக்கும் விக்ரம் படத்தையும் வாங்கியுள்ளாராம்.
இந்நிலையில் மேடையில் பேசிய கமல், உதயநிதி நடிப்பில் அடுத்த வாரம் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகவுள்ளது.எனவே அந்த வேலைகளில் பிசியாக இருக்கும் உதயநிதி எனக்காக நேரம் ஒதுக்கி விக்ரம் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்ததற்கு நன்றி என்று கூறினார்.இந்நிலையில் உதயநிதி பேசுகையில், உலகநாயகன் கமல் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். மேலும் அரசியலில் நன்றாக செயலாற்றி வருகின்றார்.
இருப்பினும் அவர் படங்களில் நடிப்பதை குறைத்து விடக்கூடாது. வருடத்திற்கு ஒரு படமாவது கமல் நடிக்கவென்றும் என்றார் உதயநிதி. இந்நிலையில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20 ஆம் தேதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!