• Sep 20 2024

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் வசூல் விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகரும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி.

இந்த திரைப்படம் ஹிந்தி வெளியாகி மாஸ் வெற்றியடைந்த Article 15 படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தனர். அந்தப் படத்தில் உதயநிதியுடன் ஆரி, தான்யா போன்றவர்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு மக்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.

இப்படத்தில் உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடித்ததோடு அனைவருக்கும் ஒரே நீதி என்பதை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளார். இதனால் வசூலிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இப்படம் முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் அதிகரித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாடங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ 3 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement