• Sep 20 2024

மாரி செல்வராஜ் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியை உடைத்த உதயநிதி.. என்ன காரணம் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்களில் ஒன்றாகவும் அந்தப் படத்தை ரசிகர்கள் கருதுகின்றனர்.

தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

 இந்நிலையில் மாமன்னன் பட ப்ரோமோஷனை ஒட்டி உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், "மாமன்னனுக்கு மாரி செல்வராஜ் சந்தோஷ் நாராயணன்தான் வேண்டும் என்று கேட்டார். நானோ இல்லை இது என் கடைசி படம். நான் சந்தோஷ் நாராயணன் உடன் பணி புரிந்திருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மானோடு பணியாற்ற வேண்டும் என்பது ஆசை என்றேன். அதனையடுத்து கொரோனா லாக்டவுன்போது ஜூம் மீட்டிங்கில் நான் மாரி செல்வராஜ், ரஹ்மான் முதல் முறையா பேசிக்கிட்டோம். அப்போது அவர் ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் இருந்தார்.

அனைவரிடமும் இது என் கடைசி படம் என்று சொல்லி சொல்லி படத்துக்குள் அழைத்து வந்தேன். அதேபோலதான் கீர்த்தி சுரேஷ். நான் இதுவரைக்கும் பெரிய ஹீரோயின் கூட படம் நடித்தது இல்லை. வளர்ந்து வரும் நடிகைகளை வெச்சுதான் படம் பண்ணிருக்கேன். ஏன்னா நான் ரொம்ப நாள் வேலை வாங்குவேன் டேட் தேவைப்படும் என்றார் மாரி செல்வராஜ்.

எனக்கும் கீர்த்திக்கும் நல்ல நட்பு இருக்கு.. ரொம்ப நாளா ஒரு படம் பண்ண வேண்டுமென்று நினைத்தோம். இந்த படம் எனது கடைசி படம் என்று சொன்னேன். கீர்த்தி உடனடியாக ஒத்துக்கொண்டார். அதுமட்டுமின்றி மாரி செல்வராஜ் படமா என்று கேட்டு அவரும் உள்ளே வந்தார். இவ்வளவு பெரிய நடிகர்கள் இருக்கும்போது நான் எப்படி இந்த கதைக்குள்ள‌ வர போறேன்னு நினைச்சேன். ஆனால் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் மாரி செல்வராஜ் முக்கியத்துவம் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது" என்றார்.

Advertisement

Advertisement