• Sep 20 2024

ஸ்டாலினை விட ரொம்ப ஆபத்தானவர் உதயநிதி இது கதறியவர்களுக்கு தெரியும்- புது சர்ச்சையைக் கிளப்பிய ஷு தமிழ் பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.இதை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என்றும் வாக்களித்துள்ளார்.

அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தான் இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பனும் வாழ்த்தி டுவீட் செய்திருக்கிறார்.


அமைச்சர் உதயநிதிக்கு ஸ்டாலின் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கரு. பழனியப்பன் கூறியிருப்பதாவது, கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கதறியவாளுக்குத் தெரியும், ஸ்டாலினை விட ரொம்ப ஆபத்தானவர் உதயநிதி என்று. கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் சின்னவரே.!! என தெரிவித்துள்ளார்.

கரு. பழனியப்பனின் டுவீட்டை பார்த்த உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மற்றவர்களோ, கரு. பழனியப்பன் திமுகவை விமர்சித்து பேசிய பழைய வீடியோக்களை கண்டிபிடித்து போஸ்ட் செய்து இது என்னவாக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும் ஸ்டாலினின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி. இது வாரிசு அரசியல் என்று விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, திராவிட மாடல் அரசை வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அமைச்சரவையில் இன்று இணைகிறேன். இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு, என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன். அன்பும், நன்றியும் என்றார்.


Advertisement

Advertisement