தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிகராக மட்டுமன்றி சர்ச்சைக்குரிய நாயகனாகவும் சில நேரங்களில் திகழ்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் உருவாகி ரசிகர்களைக் கொள்ளை கொண்ட திரைப்படங்களோ ஏராளம்.
அவ்வாறு அவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று 'ஈஸ்வரன்'. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து அசத்தியிருந்தார்.
இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது சில நாட்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கியதாகவும் தகவல் வெளிவந்தது.
மேலும் விரைவில் சிம்புவும், நிதி அகர்வாலும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக தகவல் வெளியானது. ஆனால் இவர்கள் இருவரிடம் இருந்தும் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஒன்றாக இணைந்து 'கலகத் தலைவன்' எனும் படத்தில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் உதயநிதியுடன் நெருக்கமான லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார் நிதி அகர்வால். இந்த விடயம் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
Listen News!