• Nov 19 2024

பிரபல நடிகையிடம் காதலை சொல்லப் பயம்.. கட்டிய மனைவிக்கு துரோகம்... இன்றும் பயப்பிடும் உதயநிதி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாத் திரையுலகில் ஒரு தயாரிப்பாளராகத் திகழ்ந்து வந்தவரே உதயநிதி ஸ்டாலின். அதாவது தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர் ஒரு சுபயோக சுபதினத்தில் தான் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். 


அந்தவகையில் அவர் ஹீரோவாக அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் மது பாட்டிலை மோந்து பார்த்தே அவர் போதையானது போன்ற ஒரு சில காடசிகளை இன்றும் பல சினிமா ரசிகர்கள் மறக்கவில்லை.

அதுமட்டுமல்லாது ஹீரோவாகிவிட்டோம் என்று அவசரப்பட்டு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாது தனக்கு எது பொருந்துமோ அத்தகைய கதைகளை மட்டுமே இன்றுவரை தேர்வு செய்து நடித்து வருகிறார்

இந்நிலையில் இவரின் பிறந்தநாளான இன்றைய நாளில் இவர் குறித்த ஒரு சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பேசப்பட்டு வருகின்றன. அதாவது உதயநிதி ஸ்டாலின் ஹீரோ அவதாரம் எடுத்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருந்தார். 


அந்தப்படத்தின் படி ஹன்சிகாவிடம் உதயநிதி காதலை சொல்ல வேண்டும். ஆனால் அந்த காட்சியில் கூட காதலை சொல்லக் கூச்சப்பட்டு தன் நண்பனாக நடித்த சந்தானத்தை போய் தன் சார்பில் காதலை சொல்லச் சொல்லியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதை நிகழ்ச்சி ஒன்றில் சந்தானம் கூறிய வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சமூக வலதைளங்களில் படு வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மனைவிக்கு ஒரு விடயத்தில் துரோகம் செய்திருக்கின்றாராம் உதயநிதி. அதாவது கிருத்திகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் உதயநிதி.


அந்தவகையில் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பு கிருத்திகாவுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார் உதயநிதி. அவருக்கு கொடுத்த அந்த வாக்குறுதியை காப்பாற்றாமல் துரோகம் செய்துவிட்டார். அதாவது தன் தாத்தா கருணாநிதி, தந்தை ஸ்டாலின் ஆகியோர் வழியில் உதயநிதியும் அரசியலுக்கு வந்துவிட்டார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்த 'கலகத் தலைவன்' என்ற படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸானது. அந்த படத்தை பார்த்த பலரும் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பை பாராட்டினார்கள். அந்தப் படத்தில் நிதி அகர்வாலுக்கு உதயநிதி ஸ்டாலின் முத்தம் கொடுக்க வேண்டும். 


அதற்கு முத்தம் எல்லாம் கொடுக்க மாட்டேன், கேமராவை வைத்து அட்ஜஸ்ட் பண்ணுங்கள் என்று இயக்குநரிடம் கூறியிருக்கிறாராம் உதயநிதி. அத்தோடு முடியாதுனா முடியாது என உதயநிதி ஸ்டாலின் அடம்பிடித்ததை அடுத்து கேமராவை வைத்து அட்ஜஸ்ட் செய்திருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி. 

இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாாகியும் ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்க அஞ்சுகிறாரே எனக் கூறி அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement