• Nov 19 2024

சினிமா பற்றிய பேச்சை இனிமேல் எங்கிட்ட எடுக்காதீங்க.. உதயநிதி கூறியதைக் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அரசியல் சார்ந்த குடும்பத்தில் பிறந்தாலும் சினிமாவில் கால் பதித்து தன்னுடைய திறமையினால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். சினிமாவில் படு பிசியாக நடித்து வந்த இவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். 

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது ரெட் ஜெயன்ட் நிறுவனத்திலிருந்தும் அவர் வெளியேறிவிட்டார். இருப்பினும் உதயநிதி ஏற்கெனவே மாரி செல்வராஜின் மாமனிதன் படத்திலும், மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்கள்தான் அவர் நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் கடைசி திரைப்படங்களாகும்.


இந்நிலையில் கண்ணை நம்பாதே திரைப்படமானது மார்ச் 17ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் உதயநிதி பேசுகையில் "அருள்நிதி நடித்து மாறன் இயக்கிய இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை பார்த்துவிட்டு அவருக்கு ஃபோன் செய்து படம் நல்லா இருக்கு என்றேன். 

பாண்டிராஜ் இயக்கிய வம்சம் எனக்கு வந்த கதை. அதில் ரொம்ப மெனெக்கெட வேண்டும் என இயக்குநர் சொன்னதால் அதற்கு அருள்நிதி சரியாக இருபார் என நான் தான் அவரை அனுப்பி வைத்தேன். இப்போது அருள்நிதி மாறனை என்னிடம் அனுப்பி கதை கேட்க சொன்னார். மாறன் முதலில் என்னிடம் சொன்னது காதல் கதை. ஆனால் எனக்கு க்ரைம் கதையில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. 


பிறகு அப்படிப்பட்ட ஒரு கதையை அவர் என்னிடம் சொன்னார். அதுதான் கண்ணை நம்பாதே திரைப்படம். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில்தான் அதிகமாக நடந்திருக்கிறது. இயக்குநர் மாறன் இதற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவால் சற்றுத் தாமதமானது" எனக் கூறியுள்ளார். 

மேலும் "முதல் ஷெட்யூல் முடிந்ததும் எம்.பி தேர்தல் பரப்புரை, அடுத்து இளைஞரனி செயலாளர், அடுத்து எம்.எல்.ஏ, இப்போது அமைச்சராகவே ஆகிவிட்டேன்.நான் ஒரே பாடலில் வளர்ந்துவிட்டேன் என பலரும் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் நான் நான்கரை வருடங்கள் உழைத்துதான் அமைச்சராக ஆனேன்.ரெட் ஜெயன்ட்டில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதை பார்த்துக்கொள்வது அர்ஜுன் துரையும், செண்பகமூர்த்தியும்தான். இனி சினிமா தொடர்பாக யாருமே என்னை தொடர்புகொள்ள வேண்டாம்" எனவும் கூறியுள்ளார் உதயநிதி.


எது எவ்வாறாயினும் சினிமா தொடர்பாக தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என உதயநிதி கூறி இருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement