தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருபவர் தான் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த கரணன் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதியை வைத்து மாமன்னன் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படத்தில் இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன.
இப்போது இப் படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. படத்தைப் பற்றிய ஒரு முக்கியமான தகவல் சமீபத்தில் வெளியானது. படத்தில் மாமன்னன் என்ற டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அத்தோடு இப்படத்தில் இவரின் மகனாகதான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராம். சேலத்தில் நடந்து முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்று என்றும் கூறப்படுவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- இவர்களால் தான் நான் எப்போதும் புடவை அணிகிறேன் – முதன் முதலில் உண்மையை கூறிய சாய் பல்லவி
- புதுப்படத்துக்காக கெட்டப் மாற்றிய சிவகார்த்திகேயன்-அட இவரா அவர்…!
- பாரிஸில் ரசிகர் ஒருவருக்கு அஜித் செய்த செயல்-வைரலாகும் வீடியோ..!
- பொங்கி எழும் பாக்கியா.. கடைசியில் கோபிக்கு வந்த புது ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!