• Nov 14 2024

உதயநிதி மகனுக்கு திடீரென வந்த ஹீரோ ஆசை; அவரது தயாரே கூறிய சுவாரஸ்ய தகவல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, அதன் பின்னர் படங்களில் நடிக்கத்தொடங்கினார். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி, அதன் பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதன மூலம் எம்.எல்.ஏ ஆன உதயநிதி, அதன்பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

மேலும் அவர் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதிக்கு ஹீரோவாக ஆசை வந்துள்ளதாக அவரது தாய் கிருத்திகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

உதயநிதியின் மனைவி கிருத்திகாவும் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருகிறார். தமிழில் இதுவரை வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கி உள்ள கிருத்திகா, அடுத்ததாக பேப்பர் ராக்கெட் என்கிற வெப் தொடரை இயக்கி உள்ளாராம். இந்த வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிருத்திகா, தனது மகன் இன்பநிதி குறித்தும் கூறியுள்ளார்.

மேலும் அதில் அவர் தெரிவித்ததாவது:

“கால்பந்தாட்டத்தில் ஆர்வம் காட்டி வரும் இன்பநிதி, சமீப காலமாக தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளார். அத்தோடு அதிகாலை 4 மணிக்கெல்லாம் தியேட்டரில் படம் போடுவாங்களானு கேட்டு, விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு போயிட்டு வந்தான். ரீசண்டா என்னிடம் வந்து நான் வேணா சினிமால நடிக்கட்டுமா அம்மானு என்கிட்ட கேட்டான், நான் அதெல்லாம் ஈஸியான வேலையில்ல, பர்ஸ்ட் படிப்பெல்லாம் முடிங்க, அதுக்கப்புறம் யோசிக்கலாம்னு சொல்லிட்டேன்” என குறிப்பிட்டுள்ளாராம்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement