• Sep 21 2024

உதயநிதி மகனுக்கு இப்படி ஒரு திறமையா.. அவரே கூறிய குட் நியூஸ்.. ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரை உலகில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மக்களிடையே பிரசித்தி பெற்ற ஒருவரே உதயநிதி ஸ்டாலின். அந்தவகையில் இவர் 'ஏழாம் அறிவு, ஒரு கல் ஒரு கண்ணாடி, குருவி' போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும், 'நண்பேண்டா, மனிதன், சரவணன் இருக்க பயமேன், சைக்கோ' இதை விட மேலும் பல படங்களில் நடிகராகவும் நடித்திருக்கின்றார்.


மேலும் அவர் சமீபத்தில் அமைச்சர் ஆனதைத் தொடர்ந்து இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவர் கிருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்தார். அவருக்கு இன்பா என்ற மகன் மற்றும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தனது மகன் பற்றிப் பலவாறு புகழ்ந்துள்ளார். அதாவது அவர் கூறுகையில் "என்னுடைய மகனை அறிமுகம் செய்த போது அவர் ஒரு கால்பந்து வீரர் எனக் கூறினார்கள்.

ஆனால் என் மகன் கால்பந்து வீரர் மட்டுமல்லாமல் அவர் டேபிள் டென்னிஸ்ஸும் ஆடுவார்" என்று கூறியுள்ளார். மேலும் "தனது வீட்டில் ஒரு டென்னிஸ் கோர்ட் இருக்கிறது அங்கு அவர் விளையாடுவதில்லை என்றும் தனது மகன் சோர்வாக இருக்கும்போது தன்னை விளையாட அழைப்பார் அப்போது தான் தனது மகனோடு விளையாட செல்வதாகவும் விளையாட்டில் இன்பா தன்னை தோற்கடித்து உற்சாகமடைவார் என்றும்" தன்னுடைய மகன் பற்றிப் பலவாறு புகழ்ந்து கூறினார் உதயநிதி.


இதனை அறிந்த ரசிகர்கள் உதயநிதி மகனுக்கு விளையாட்டில் இப்படி ஒரு திறமை உள்ளதா எனக் கேட்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

Advertisement