• Sep 20 2024

உதயநிதிக்கு வந்த சோதனை... 'மாமன்னன்' படத்தை வெளியிடத் தடை கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்... நடந்தது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும், முக்கிய வேடத்தில் வடிவேலு,ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு  நிலவி வருகின்றது. அந்தவகையில் மாமன்னன் படமானது ஜூன் 29 ஆம் திகதி வெளியாகவுள்ளது.


இதனையொட்டி கடந்த ஜூன் 1 ஆம் தேதி  மாமன்னன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த படம் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தை வெளியிட தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளர் ராம சரவணன் தாக்கல் செய்துள்ள குறித்த மனுவில், "ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பு 20 சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. உதயநிதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படம் முழுவதும் முடிந்துவிடும். ஆனால், மாமன்னன் படத்தை தனது கடைசி படமாக அறிவித்துள்ளார். 

நாங்கள் இதுவரை ஏஞ்சல் படத்திற்கு ரூ. 13 கோடி செலவு செய்துள்ளோம். ஏஞ்சல் படம் முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். 8 நாட்கள் கால்ஷீட் கேட்டும் உதயநிதி அதைத் தர மறுக்கிறார். ஏஞ்சல் படத்தை முழுவதும் முடிக்க வேண்டும் அல்லது இழப்பீடாக உதயநிதி ரூ. 25 கோடி தர வேண்டும். அதுவரைக்கும் மாமன்னன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement