பிக் பாஸ் சீசன் 6 முடிவுகள் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் இன்னும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. 21 போட்டியாளர்களுடன் கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது.
ஜிபி முத்து, அசல் கோளாறு, ஷிவின், விஜே மகேஸ்வரி, விஜே கதிர், தனலட்சுமி, ராம், அமுதவாணன், சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா, மைனா நந்தினி, ஏடிகே, விக்ரமன், அசீம், மணிகண்டன், ஜனனி, நிவாஷினி, ஷெரினா, ஆயிஷா, குயின்ஷி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த சீசனின் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். ஆனால், நியாயமாக விளையாடிய விக்ரமன் தான் வெற்றியாளர், அசீம் பிக் பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவர் இல்லையென நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.பாய்காட் விஜய் டிவி, அறம் வெல்லும் போன்ற ஹேஷ்டேக்குகளில் விக்ரமனுக்கு ஆதரவாகவும், அபியூசர் அசீம், பாய்காட் விஜய் டிவி என அசீமுக்கு எதிராகவும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின.
இதனால் பிக் பாஸ் சீசன் 6 முடிந்தும் டைட்டில் வின்னராக அசீமை அறிவித்தது கடும் சர்ச்சையானது. இது தவறான முன்னுதாரணம் எனவும் பலரும் கருத்து கூறி வந்தனர். இதனிடையே இறுதிப் போட்டிக்கு முன்னர் வாக்கு சேகரித்த அசீம், தான் டைட்டில் வென்று 50 லட்சம் கிடைத்தால், அதில் 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விக்காக கொடுப்பேன் என்றிருந்தார். அதன்பிறகு டைட்டில் வென்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும், ஏற்கனவே சொன்னபடி ரூ.25 லட்சத்தை மாணவர்களின் கல்விக்காக கொடுக்க உள்ளதாகக் கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ள அசீம், மாணவர்களின் கல்விக்காக 17.5 லட்சம் பணம் கொடுப்பேன் என மாற்றி பேசியுள்ளார். அதாவது 50 லட்சத்துக்கு வருமானவரி பிடித்தம் போக ரூ.35 லட்சம் தான் கையில் கிடைக்கும், அதில் பாதி தொகையான 17.5 லட்சத்தை மாணவர்களுக்கு கொடுப்பேன் என்றுள்ளார். இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அசீம் எப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசினாரோ, இப்போதும் அப்படியே நடந்து கொள்கிறார். முதலில் 25 லட்சம் என கூறிவிட்டு இப்போது 17.5 லட்சம் கொடுப்பேன் என்கிறார். வருமானவரி பற்றியெல்லாம் அவருக்கு முன்னமே தெரிந்திருக்கும், அப்படியிருந்தும் ஏன் இப்படி பொய் சொல்லி மக்களையும் மாணவர்களையும் ஏமாற்ற வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
மேலும் மீண்டும் அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்குடன் அசீம் எப்போதுமே நேர்மையாக இருக்கமாட்டார் எனவும் விமர்சித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 6 முடிவுக்கு வந்து 3 வாரங்கள் ஆகியும் இன்னும் அசீம் - விக்ரமன் சர்ச்சைகள் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!