• Nov 14 2024

பிரபல நடிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்... இதுவரை யாருமே பார்த்திராத அரிய வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை வென்ற ஒருவராக இன்றுவரை திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருகின்றார். படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற இவர் நிஜத்தில் சாந்தமான குணம்  கொண்டவராக விளங்கி வருகின்றார்.



எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியமைத்து நடிக்கக் கூடிய திறமை இவருக்கு உண்டு. அதாவது ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமன்றி நகைச்சுவை நாயகனாகவும் நடிக்கக் கூடிய திறமை இவருக்கு உண்டு. இவர் நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் களை கட்டி வருபவர்.



இவரின் நடிப்பில் உருவான படங்களோ 65. அதுமட்டுமன்றி இவர் தற்போது தனது 66-ஆவது படமான 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகின்றார். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. 'வாரிசு' படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்து 'தளபதி 67' படத்தில் இணையவிருக்கின்றார் நம்ம தளபதி. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  


இந்த நிலையில் நடிகர் விஜய்யின் யாருமே இதுவரை பார்த்திராத வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான கார்த்தியின் திருமண வீடியோவே வெளியாகி இருக்கின்றது. அதில் நம்ம விஜய் சூர்யாவுடன் இணைந்து தம்பதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கின்றார். அந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement