தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பினாலும், சிறந்த நடனத்தினாலும் அதிகளவான மக்கள் மனங்களை வென்ற வெற்றி நாயகனாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் திரைத்துறையை பின்னணியாக கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டது தன்னுடைய விடாமுயற்சியினாலும், கடின உழைப்பினாலும் மட்டுமே தான்.
'தளபதி' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற இவர் இந்திய சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களும் முக்கியமாக கவனிக்கும் ஒரு பிரபலமாக விளங்கி வருகின்றார். தமிழை தாண்டி ஹிந்தியில் கூட விஜய்யின் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'வாரிசு' என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது. அத்தோடு விஜய்யின் 67 ஆவது படம் பற்றிய தகவல்களும் அவ்வப்போது கசிந்த வண்ணம் தான் இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் அரிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வலம் வருகிறது. அதாவது விஜய்க்கு ஒரு தங்கை இருந்ததும், அவர் சிறு வயதிலேயே இறந்து விட்டமையும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமே. அந்தவகையில் விஜய் தன்னுடைய சிறுவயதில் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி பிராத்தனை செய்கிறார்.
Rare Video Vijay Thalapathy @actorvijay praying of Sister 💓💥#Varisu #Thalapathy67 pic.twitter.com/pPspRqOlDh
இந்த வீடியோ ஐப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!