• Nov 14 2024

ஜேகேவின் காதலைப் புரிந்து கொண்டு ரகசியத் திருமணம் செய்து கொண்ட ரம்யா- தேவி எடுக்கப் போகும் முடிவு என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியல் ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது.காவியாவை பார்த்திபன் அனைவர் முன்னாடியும் ஏற்றுக் கொண்டாலும் தனியாக காவியாவுடன் வாழ்வதை மறுத்தே வருகின்றார்.

அத்தோடு ஜீவா ப்ரியாவின் மனதை எப்படியாவது மாற்றி விடவேண்டும் அவருடன் சேர்ந்த வாழ வேண்டும் என்பதால் ப்ரியா வீட்டிலேயே தங்கி விட்டார். இப்படியான நிலையில் பார்த்தியின் அத்தை மகளான ரம்யா ஜேகேயின் காதலை ஏற்றுக் கொண்டதோடு யாருக்கும் தெரியாமல் ஜேகேவை திருமணம் செய்து விடுகின்றார்.

இதனால் தேவி இதனை எப்படி எடுத்துக் கொள்வார். அல்லது இது கனவா என்பதை எப்பிஷோட் பார்த்தால் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement