தமிழில் கடந்த நவம்பர் 4-ந் தேதி ரிலீசான திரைப்படம் தான் லவ்டுடே. இப்படம் இளசுகள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி தற்பொழுது வரை சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கிலும் ரிலீஸ் செய்தனர்.தெலுங்கிலும் வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றது.அத்தோடு 100 கோடி இப்படம் வசூலிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 2 ஆம் தேதியான நேற்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவானா இப்படத்திலிருந்து சில புகைப்படங்களை பதிவிட்டு மறக்க முடியாத நினைவுகள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!