• Nov 17 2024

"துரதிர்ஷ்டவசமாக எனக்கு ஏற்பட்டுள்ள நோய்"-பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட வேதிகா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி படத்தின் மூலம் ரசிகர்களிடத்தே பிரபலமானவர் நடிகை வேதிகா.இவர் இந்தி உள்ளிட்ட இந்தியாவில் முன்னணி மொழிகளில் விளம்பர படங்களில் நடித்து பின் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வேதிகா.இதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக உள்ளார்.

பின் சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரது நடனம் குட்டிப்பிசாசு பாட்டில் இவரது நடனம் ரசிகர்களிடத்தே பரவலாக பாராட்டப்பட்டது.

அதன் பின் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் கலா பிரபு இயக்கத்தில் சக்கரக்கட்டி படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.இதன் பின் பரதேசி படத்தில் இயக்குநர் பாலா இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பரதேசி படத்தில் வேதிகாவின் நடிப்பிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.

இதன் பின் வசந்த பாலன் இயக்கத்தில் காவியத்தலைவன் படத்தில் சித்தார்த், பிருதிவிராஜ் உடன் நடித்தார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்களை வைத்துள்ள வேதிகா, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர். சமீபத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி, மாலத்தீவில் இருந்து பிகினி படங்களை வெளியிட்டு இருந்தது ரசிகர்களிடத்தே வைரலானது.

இந்நிலையில் வேதிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், கடந்த இரண்டு நாட்களாக தனக்கு அதிக காய்ச்சல் இருப்பதாக கூறியுள்ளார். தனது ரசிகர்களை முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொண்டார்.

"துரதிர்ஷ்டவசமாக நான் முதல் முறையாக கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எல்லா மக்களும் லேசான அறிகுறிகளை எதிர்கொள்வதில்லை. எனக்கு அதிக காய்ச்சல் இருந்தது. இப்போது இரண்டு நாட்கள், தயவு செய்து அறிகுறிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள், பயங்கரமான உடல்வலி மற்றும் அதிக காய்ச்சலினால் (103 Fக்கு மேல்) உடல்நிலை சரியில்லாமல் இருப்பது மதிப்புக்குரியது அல்ல. மேலும், தயவு செய்து நீங்கள் ஒருமுறை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாதென்று நம்ப வேண்டாம்." என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement