• Nov 14 2024

நடிகர் மயில்சாமி பற்றி இதுவரை தெரியாத விடயங்கள்- கடும் சோகத்தில் பிரபலங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று காலமானார். சென்னையில் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் விடிய விடிய வந்து அஞ்சலி செலுத்தினார்கள் அத்தோடு இன்றைய தினம் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இவர் குறித்து பார்க்கலாம் வாங்க.

நடிகர் மயில்சாமி 1965ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி சத்தியமங்கலம் 2ம் திகதி பிறந்தார். இவர் ஜுனியர் ஆட்டிஸ்டாக இருக்கும் போது பாக்கியராஜ் நடிப்பில் வெளியாகியிருந்த தாவணிக் கனவுகள் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடிக்க ஆரம்பித்தார்.


இவர் நடித்த திரைப்படங்களில் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என்றால் அபூர்வ ராகங்கள் ,வெற்றிவிழா, உழைப்பாளி எனப் பல படங்களின் பெயர்களைக் குறிப்பிடலாம்.தொடர்ந்து 2000ம் ஆண்டுகளுக்கு பிறகு இவர் நடித்த படங்கள் இவருக்கு நல்ல காமெடியன் என்ற அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

பெண்ணின் மனதைத் தொட்டு, கண்ணுக்கு கண்ணாக, விண்ணுக்கும் மண்ணுக்கும், பூவெல்லாம் உன் வாசம், ராஜா ,ஜெயம், கில்லி எனப் பல படங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கின்றார். குறிப்பாக இவர் விவேக் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி சீன்கள் எல்லாம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.


தொடர்ந்து தற்பொழுதும் நடித்து வரும் இவர் சினிமாவில் வளர்ந்து வந்ததைப் போல தன்னுடைய மகன் அன்புவை எப்படியாவது ஹீரோவாக அறிமுகப்படுத்தணும் என்று பல முயற்சிகள் செய்தாராம். ஆனால் அவருடைய முயற்சி கை கொடுக்கவே இல்லை எனலாம். இப்படி இருக்கையில் இவர் எதிர்பாராத நேற்றைய தினம் இறந்தது அனைவருக்குமே அதிர்சியான தகவலாகத் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement