• Nov 19 2024

அஜித்தின் ரீல் மகள் அனிகா பற்றி இதுவரை தெரிந்திடாத விடயங்கள்- இவர் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் , மலையாளம் ,தெலுங்கு ஆகிய திரைப்பட துறைகளில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது  சினிமா நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அனிகா சுரேந்தரன்.தமிழ் சினிமாவில் சில படங்களில் பேபி அனிகாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் அவர் குறித்து தற்போது பார்க்கலாம் வாங்க. 

அனிகா சுரேந்தர் 2004 நவம்பர் 27-ஆம் திகதி மலப்புரம் ,கேரளாவில் பிறந்தார்.தற்போது இவரின்  வயது 18 ஆகும்.ஒரு குழந்தை நட்சத்திரமாக முதலில் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார் . இவர் நடித்த முதல் திரைபடம்  'சோட்டா மும்பை'(2007) . இதன் பிறகு மலையாள திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த இவர் 2015-ஆம் ஆண்டு  என்னைஅறிந்தால் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 'நானும் ரவுடிதான், மிருதன்,விஷ்வாசம், மாமனிதன் போன்ற  படங்களை நடித்திருந்தார். அதே ஆண்டு வெளியான பாஸ்கர்  ஒரு ராஸ்கல் மலையாள படத்தில்  நயன்தாராவுக்கு மகளாக நடித்துதிரையுலகில் இன்னும் பிரபலியம் ஆனார். அத்தோடு தெலுங்கிலும் பூதம் ,புத்த பொம்மா போன்ற படங்களில் நடித்திருந்தார். 


என்னை அறிந்தால் திரைப்படத்தில் தமிழில் அறிமுகம் ஆகினாலும் ஓரளவு அனிகா யார் என்ற அறிமுகத்தையே தந்திருத்தது. தொடர்ந்து அவர் நடித்த விஷ்வாசம், மிருதன் போன்ற திரைப்படங்களில் நயன்தாராவை போன்றே இருக்கிறார் .நயன்தாராவின் மகள் என்றே சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டிருந்தார் .நயன்தாராவின் ரசிகர்களும் அனிகாவின் ரசிகர்களாக மாறினாரங்கள். இந்த நிலையில்  சமூகவலைத்தளங்களில் புகைப் படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார். இவரின் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்றப்பு கிடைத்தது. 


தொடர்ந்து சாதாரண புகைப்படங்களை விட இன்னும் வித்தியாசமான புகைப் படங்களை பதிவு செய்தார்.இது ஒரு புறம் இருக்கவே படங்களிலும் நடித்து வந்தார் . கதாநாயகியாக அவர் நடித்து இருந்த ஓ மீ டார்லிங் திரைப்படத்தின் பின்னப்பு ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளானார். எதிர்மறையான விமர்சனங்களை தவிர்த்து தொடர்ந்து  படங்களில் நடித்து வரும் இவர்.PT சார்,வாசுவின் கார்பினிகல் மற்றும் தனுஷின் D50 திரை படத்திலும் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement