• Sep 20 2024

விஜய்டிவியின் முக்கிய பிரபலத்தின் திருணத்திற்குச் சென்ற விருமன் பட நடிகை -அன்சீன் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராகவும் பிரமாண்ட இயக்குநராகவும் வலம் வருபவர் தான் ஷங்கர். இவர் தற்பொழுது இந்தியன் 2 ,ராம்சரணின் ஆர் சி15 ஆகிய திரைப்படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்து வருகின்றார்.

இந்த நிலையில் இவரது இரண்டாவது மகள் தான் அதிதி. இவர் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.


மேலும் விருமன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி.இந்நிலையில் அதிதி ஷங்கரின் எந்த ஒரு அன்சீன் புகைப்படம் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கமாக இருக்கிறது.


அதன்படி பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-ன் திருமணத்தில் ஷங்கர் மற்றும் அதிதி கலந்து கொண்டுள்ளனர்.இது குறித்த புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement