அஜித் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கும் படம் துணிவு. போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்து இருக்கிறார்.
அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படம் 2023 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அத்தோடு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் ரிலீஸ் ஆகுமென்பதால் பெரியளவில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துணிவு தமிழ்நாடு ரிலீஸ் உரிமை மட்டுமே தற்போது விற்பனை ஆகி உள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் இதை வெளியிடுகிறது.
ஆனால் "கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்கள் ரிலீஸ் செய்ய enquiry கூட வரவில்லை, வெளிநாட்டு உரிமையை வாங்க யாருமே இதுவரை வரவில்லை" என ஒரு பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
"சினிமா விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை அஜித் தான் சொல்ல வேண்டும். அப்போது தான் படம் பற்றிய சந்தேகங்கள் விநியோகஸ்தர்களுக்கு தீரும்" எனவும் கூறி அந்த பத்திரிகையாளர் அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
Listen News!