• Sep 20 2024

மாவீரன் படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்து வெளியாகிய அப்டேட்- சிவகார்த்திகேயன் வெளியிட்ட சூப்பர் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர் - நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரே மாதிரியான கதையை தேர்வு செய்து நடிக்காமல் வித்தியாசமான கதைக்களம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடித்து வருகின்றார்.அந்த வகையில், இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம், 'மாவீரன்'

 இயக்குநர், மடோன் அஸ்வின் இயக்கத்தில், உருவாக்கியுள்ள இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


 இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே, முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.அண்மையில் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் செய்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தற்பொழுது ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் 14.06.2023 அன்று வெளியாகும் என்றும் இப்பாடலிலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஆகியோரே இணைந்து பாடியும் உள்ளனர்.இது குறித்த ப்ரோமோவைத் தான் சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement