கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார்.ஆனால் பீஸ்ட் திரைப்படம் படு தோல்வியையே சந்தித்தது. இதனை அடுத்து ரஜினியை வைத்து ஜெயிலர் என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இப்படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக்குவதும், அதற்காக பல மொழிகளில் இருந்தும் ஸ்டார்களை களம் இறக்குவதும் என ரஜினிகாந்த் ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது.. அதன்படிதான், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலானது. திரைப்படமானது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது . இதற்கிடையே படத்தின் முதல் சிங்கிளான காவாலா என்ற பாடல் நாளை மாலை வெளியாகவிருக்கிறது. அதுதொடர்பான ப்ரோமோ வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இதன் ஆடியோ வெளியீட்டு விழாவானது சென்னையில் இந்த மாதம் 29ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என கூறப்படுகிறது. இதில் ரஜினி உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!