• Nov 17 2024

பேய் சிரிப்பு சிரித்த மணிமேகலை…வேப்பிலை அடிக்கணும் எனக்கூறிய உசைன்…வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை மூலமாக அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் மணிமேகலை. இவர் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றியிருந்தார். அதில் 'ஃபிரியா விடு, வெட்டி பேச்சு' என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இவ்வாறாக சன் மியூசிக் மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமன்றி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வரும் மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான உசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.

டான்ஸ் மாஸ்டர் உசைன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னரும் இவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வண்ணமே இருக்கின்றார். எப்போதுமே சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வரும் இவர் அவருடன் சேர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான குறும்புத்தனம் நிறைந்த வீடியோக்களை வெளியிட்டு வருவது வழமை.

அந்த வகையில் தற்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டிருக்கின்றார். அதாவது "பெண்ணே நீ சிரித்தால்…" என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். அந்த வீடியோவில் மணிமேகலை சிரித்த சிரிப்பை பார்த்து உசைன் "இப்படி சிரிச்சா வேப்பிலை தான் அடிக்கணும்" என கலாய்த்து உள்ளார்.

இதற்கு மணிமேகலை "உசேன் இதை ரீல்ஸ்க்காக சொல்லல, நிஜத்திலேயும் அவன் அப்படித்தான் சொல்லுவான்" என கேப்ஷன் போட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement