• Sep 20 2024

அடேங்கப்பா.. விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா..? அதிகம் யாருக்கு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனரே, அந்தளவிற்கு சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சீரியலிற்கே பேர் போன சேனலாக விஜய் டிவி விளங்கி வருகின்றது. 

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் கதாநாயகிகள் பலரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பெற்றுக் கொள்ளும் சம்பள விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.

அந்தவகையில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி என்பவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.7 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகின்றார்.


அதேபோன்று பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடித்து வரும் வினுஷா தேவி இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.8 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார்.


மேலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் நக்‌ஷத்ரா நாகேஷ் இந்த தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகின்றார்.


அதேபோன்று பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவாக நடித்து வரும் நடிகை சுசித்ரா, ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகின்றார்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனுஷ் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகின்றார்.


Advertisement

Advertisement