• Sep 20 2024

பிரபல நடிகையுடன் பிறந்தநாள் கொண்டாடிய வடிவேல்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர்  வடிவேலு இன்று  தன்னுடைய 62 ஆவது பிறந்தநாளை 'மாமன்னன்' படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம்  தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தமிழ் திரைப்படத்துறையில் “வைகைப் புயல்” என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகராக வலம் வருகின்றார்.

நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். இவரது நடிப்பில் வெளியாகிய ஃப்ரண்ட்ஸ், சச்சின் சந்திரமுகி திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பேசப்படும் படங்களாகவே இருக்கின்றன.



இவ்வாறுஇருக்யைில் நடிகர் வடிவேலு இன்று தன்னுடைய 62 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு அனைத்து ரசிகர்களும், பல பிரபலங்களும் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



அத்தோடு கடந்த ஆண்டு, நாய் சேகர் ரிட்டர்ஸன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வைகை புயல் இந்த ஆண்டு, உதயநிதி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் 'மாமன்னன்' படக்குழுவினருடன், 62 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.



 சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,  பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார். அத்தோடு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு தெரிவித்தனர்.



அதிலும் குறிப்பாக சந்திரமுகி 2, மட்டும் 'மாமன்னன்' ஆகிய படங்கள் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படங்களில் மீண்டும் மீம்ஸ் மன்னன், வடிவேலுவின் வேற லெவல் காமெடியை கண்டுகளிக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement