• Nov 10 2024

வடிவேல் நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைவிமர்சனம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வைகைப்புயல் வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காவிட்டாலும் அவரின் வசனங்களை வைத்து தொடர்ந்து மீம்ஸ் போடுகிறார்கள் ரசிகர்கள். மீம்ஸுகள் மூலம் தினம் தினம் ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறுஇருக்கையில் தான்  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவின் சில பிரபலமான வசனங்கள் வரும்போது நம்மையும் அறியாமல் ரசிக்கிறோம். ஆனால் அங்கேயே அந்த ரசிப்பு நின்றுவிடுகின்றது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸுக்காக சுவராஸ்யமான திரைக்கதையை அமைக்க இயக்குநர் சுராஜ் முயற்சி செய்யவில்லை. வடிவேலுவின் பழைய ஜோக்குகளை நம்பி படம் எடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் சில நல்ல காமெடி காட்சிகள் இருந்தாலும் படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

கடத்தல்காரர்களான தாஸ்(ஆனந்த் ராஜ்), நாய் சேகர் (வடிவேலு) ஆகியோரின் அறிமுகத்துடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் துவங்குகிறது. தாஸ் பெண்களை கடத்துகிறார், நாய் சேகரோ பணத்திற்காக விலை உயர்ந்த நாய்களை கடத்துகிறார்.அத்தோடு  தாஸுக்கு பிடித்த நாயை நாய் சேகர் கடத்தும்போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இதையடுத்தே தன் குடும்பத்தின் கடந்த காலம், அவர்களுக்கு ராசியான நாய் கடத்தப்பட்டது குறித்து நாய் சேகருக்கு தெரிய வருகின்றது.


ஹைதராபாத்தில் இருக்கும் பெரும்புள்ளியான மேக்ஸிடம் இருந்து தங்கள் குடும்பத்துக்கு ராசியான நாயை நாய் சேகர் மீட்க முயற்சிப்பதை இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார்கள்.அத்தோடு தான் எடுத்திருக்கும் முயற்சியில் நாய் சேகர் ஜெயிப்பாரா என்பதே கதை.

நாய்களை கடத்தும் ஹீரோ என்பதே வித்தியாசமான கதை தான். ஆனால் அதை சுவாரஸ்யமாக கையாளத் தெரியாமல் சொதப்பிவிட்டார்கள். வடிவேலு படத்தை பார்த்து சிரிக்கலாம் என்று தியேட்டருக்கு சென்றவர்களுக்கு சிரிப்பு வராமல் போய்விட்டது.


ஆனந்த் ராஜின் ஒன்லைனர்கள் மட்டுமே படத்தை காப்பாற்றியிருக்கிறது. அத்தோடு அவரும், வடிவேலுவும் சேர்ந்து வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. இது தவிர்த்து படத்தில் வேறு எதுவும் இல்லை. மேக்ஸின் சகோதரியாக நடித்திருக்கும் ஷிவானி நாராயணன் இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகளில் வருகிறார். அத்தோடு தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் ஷிவானி.

சிறிது நேரமே வருகிறார் சிவாங்கி. ஆனால் அவருக்கு நடிக்க வாய்ப்பே கொடுக்கவில்லை. அத்தோடு ரெடின் கிங்ஸ்லி தன் காமெடி டைமிங்கில் கவனம் செலுத்தியிருந்திருக்க வேண்டும்.


வடிவேலுவை எப்பொழுது பெரிய திரையில் பார்த்தாலும் மகிழ்ச்சி தான். மேலும் அவர் தன் கதாபாத்திரமாகவே மாறி நடித்து அசத்தியிருக்கிறார். திரைக்கதை மட்டும் சிறப்பாக இருந்திருந்தால் வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அத்தோடு சந்தோஷ் நாராயணனின் பாடல்களும், பின்னணி இசையும் முதல் பாதியில் கை கொடுத்தது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவுக்கு கை கொடுக்கவில்லை. அவர் இனி சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து நம்மை மகிழ்விப்பார் என்று நம்புவோமாக.

Advertisement

Advertisement