• Sep 21 2024

வடிவேலு - பகத் பாசில் நடிப்பில் மீண்டுமொரு பிரம்மாண்ட திரைப்படம்! வெளியான ஸ்பெஷல் நியூஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் வடிவேலு.

சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதிலும் வடிவேலுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.


இந்த நிலையில், வடிவேலு மற்றும் பகத் பாசில் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக புத்தாண்டை முன்னிட்டு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் வடிவேலு - பகத் பாசில் நடிக்கவுள்ளதோடு, தார் சாலையை அடிப்படையாக வைத்தோ... சாலை மார்கத்தை அடிப்படையாக வைத்தோ இதன் கதை உருவாகலாம் என்பதை தெரிவிக்கும் விதத்தில் இப்படத்தின் போஸ்டர் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement