தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருகிறார் வடிவேலு.கடந்த சில வருடங்களாக நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்த வடிவேலு, தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், வடிவேலு மீது கேப்டன் விஜயகாந்த் கோபமான சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. வடிவேலுவின் ஆரம்ப நாட்களில் அவருக்கு அதிகமான உதவி செய்தவர்களில் விஜயகாந்தும் ஒருவர். வடிவேலு மட்டும் இல்லாமல் திரைத்துறையில் பலருக்கும் உதவியவர் விஜயகாந்த். ஒருகட்டத்தில் விஜயகாந்துக்கும் வடிவேலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை.
முன்னதாக நடிகர் மீசை ராஜேந்திரனை ஒரு படத்தில் நடிக்க வரவைத்துள்ளார் வடிவேலு. மீசை ராஜேந்திரனை ஒருநாள் போனில் அழைத்த வடிவேலு, காலை 7 மணிக்கு டிஆர் கார்டனில் ஷூட்டிங் இருக்கு, வந்துருங்க என கூறியிருந்தாரம். அதனால் மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட் சென்றுள்ளார் மீசை ராஜேந்திரன். ஆனால், அவருக்குப் பதிலாக நடிகர் பெசண்ட் ரவியை வைத்து படப்பிடிப்பு நடந்துள்ளது.இதுகுறித்து வடிவேலுவிடம் நேரில் சென்று கேட்டுள்ளார் மீசை ராஜேந்திரன். அதற்கு, நீங்கெல்லாம் விஜயகாந்த் ஆளு, உங்களுக்கெல்லாம் சான்ஸ் இல்லை என முகத்தில் அடித்தார் போல கூறியுள்ளார் வடிவேலு. இதனால், அங்கிருந்து வருத்தத்துடன் கிளம்பிச் சென்ற மீசை ராஜேந்திரன், இரு தினங்களுக்குப் பின்னர் கேப்டன் விஜயகாந்தை சந்தித்துள்ளார். அப்போது டிஆர் கார்டனில் என்ன நடந்தது மீசை ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார் விஜயகாந்த்.
மீசை ரஜேந்திரனும் விசயத்தை சொல்ல, விஜயகாந்த் செம்ம டென்ஷன் ஆகிவிட்டாராம். "நீ ஏன் வடிவேலுவை சும்மா விட்டுட்டு வந்த... இவ்வளவு தூரம் பண்ணிருக்காரு... சும்மா வந்திருக்க" என கோபமாக பேசியுள்ளார். அதற்கு நடிகர் சங்கமெல்லாம் இருக்கு கேப்டன், அதான் அமைதியாக வந்துவிட்டேன் என மீசை ராஜேந்திரன் சொல்ல, "என்ன பெரிய நடிகர் சங்கம், என்னை மீறி நடிகர் சங்கம் போயிடுமா?" எனக் கேட்டுள்ளார்.
மேலும், சின்ன கவுண்டர் படத்தில் நடித்தபோது நான் தான் வடிவேலுவை புக் செய்தேன். மாத்து துணி கூட இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு நான் தான் 8 வேட்டி, 8 சட்டை வாங்கிக் கொடுத்தேன். இனிமே வடிவேலு நடிக்கக் கூப்பிட்டா நீ போகவே வேண்டாம் என மீசை ராஜேந்திரனை கண்டித்துள்ளார் விஜயகாந்த். இந்தச் சம்பவம் குறித்து தற்போது மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Listen News!